2: 2 செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களோடேகூட திரும்பிவந்த தேசத்துப் புத்திரராகிய இஸ்ரவேல் ஜனமான மனிதரின் தொகையாவது:
2: 3 பாரோஷின் புத்திரர் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர்.
2: 4 செபத்தியாவின் புத்திரர் முந்நூற்று எழுபத்திரண்டுபேர்.
2: 5 ஆராகின் புத்திரர் எழுநூற்று எழுபத்தைந்துபேர்.
2: 6 யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டுபேர்.
2: 7 ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர்.
2: 8 சத்தூவின் புத்திரர் தொளாயிரத்து நாற்பத்தைந்துபேர்.
2: 9 சக்காயின் புத்திரர் எழுநூற்று அறுபதுபேர்.
2: 10 பானியின் புத்திரர் அறுநூற்று நாற்பத்திரண்டுபேர்.
2: 11 பெபாயின் புத்திரர் அறுநூற்று இருபத்துமூன்றுபேர்.
2: 12 அஸ்காதின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று இருபத்திரண்டுபேர்.
2: 13 அதொனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தாறுபேர்.
2: 14 பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து ஐம்பத்தாறுபேர்.
2: 15 ஆதீனின் புத்திரர் நானூற்று ஐம்பத்து நான்குபேர்.
2: 16 எசேக்கியாவின் சந்ததியான அதேரின் புத்திரர் தொண்ணூற்றெட்டுப்பேர்.
2: 17 பேசாயின் புத்திரர் முந்நூற்று இருபத்துமூன்றுபேர்.
2: 18 யோராகின் புத்திரர் நூற்றுப் பன்னிரண்டுபேர்.
2: 19 ஆசூமின் புத்திரர் இருநூற்று இருபத்துமூன்றுபேர்.
2: 20 கிபாரின் புத்திரர் தொண்ணூற்றைந்துபேர்.
2: 21 பெத்லகேமின் புத்திரர் நூற்றிருபத்துமூன்றுபேர்.
2: 22 நெத்தோபாவின் மனிதர் ஐம்பத்தாறுபேர்.
2: 23 ஆனதோத்தின் மனிதர் நூற்றிருபத்தெட்டுப்பேர்.
2: 24 அஸ்மாவேத்தின் புத்திரர் நாற்பத்திரண்டுபேர்.
2: 25 கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் என்பவைகளின் புத்திரர் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர்.
2: 26 ராமா, காபா என்பவைகளின் புத்திரர் அறுநூற்று இருபத்தொருபேர்.
2: 27 மிக்மாசின் மனிதர் நூற்றிருபத்திரண்டுபேர்.
2: 28 பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர் இருநூற்று இருபத்துமூன்றுபேர்.
2: 29 நேபோவின் புத்திரர் ஐம்பத்திரண்டுபேர்.
2: 30 மக்பீஷின் புத்திரர் நூற்றைம்பத்தாறுபேர்.
2: 31 மற்ற ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர்.
2: 32 ஆரீமின் புத்திரர் முந்நூற்றுஇருபதுபேர்.
2: 33 லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் புத்திரர் எழுநூற்று இருபத்தைந்துபேர்.
2: 34 எரிகோவின் புத்திரர் முந்நூற்று நாற்பத்தைந்துபேர்.
2: 35 சேனாகின் புத்திரர் மூவாயிரத்து அறுநூற்று முப்பதுபேர்.
2: 36 ஆசாரியரானவர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் புத்திரர் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர்.
2: 37 இம்மேரின் புத்திரர் ஆயிரத்து ஐம்பத்திரண்டுபேர்.
2: 38 பஸ்கூரின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழுபேர்.
2: 39 ஆரீமின் புத்திரர் ஆயிரத்துப்பதினேழுபேர்.
2: 40 லேவியரானவர்கள்: ஒதாயாவின் சந்ததியான யெசுவா கத்மியேல் என்பவர்களின் புத்திரர் எழுபத்து நான்குபேர்.
2: 41 பாடகர்களானவர்கள்: ஆசாபின் புத்திரர் நூற்றிருபத்தெட்டுப்பேர்.
2: 42 வாசல் காவலாளரின் புத்திரரானவர்கள்: சல்லூமின் புத்திரரும், அதேரின் புத்திரரும், தல்மோனின் புத்திரரும், அக்கூபின் புத்திரரும், அதிதாவின் புத்திரரும், சோபாயின் புத்திரருமானவர்களெல்லாரும் நூற்றுமுப்பத்தொன்பதுபேர்.
2: 43 நிதனீமியரானவர்கள்: சீகாவின் புத்திரர், அசுபாவின் புத்திரர், தபாகோத்தின் புத்திரர்,
2: 44 கேரோசின் புத்திரர், சீயாகாவின் புத்திரர், பாதோனின் புத்திரர்,
2: 45 லெபானாகின் புத்திரர், அகாபாவின் புத்திரர், அக்கூபின் புத்திரர்,
2: 46 ஆகாபின் புத்திரர், சல்மாயின் புத்திரர், ஆனானின் புத்திரர்,
2: 47 கித்தேலின் புத்திரர், காகாரின் புத்திரர், ராயாகின் புத்திரர்,
2: 48 ரேத்சீனின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், காசாமின் புத்திரர்,
2: 49 ஊசாவின் புத்திரர், பாசெயாகின் புத்திரர், பேசாயின் புத்திரர்,
2: 50 அஸ்னாவின் புத்திரர், மெயூனீமின் புத்திரர், நெபுசீமின் புத்திரர்,
2: 51 பக்பூக்கின் புத்திரர், அகுபாவின் புத்திரர், அர்கூரின் புத்திரர்,
2: 52 பஸ்லூதின் புத்திரர், மெகிதாவின் புத்திரர், அர்ஷாவின் புத்திரர்,
2: 53 பர்கோசின் புத்திரர், சிசெராவின் புத்திரர் தாமாவின் புத்திரர்,
2: 54 நெத்சியாவின் புத்திரர், அதிபாவின் புத்திரருமே.
2: 55 சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரானவர்கள்: சோதாயின் புத்திரர், சொபெரேத்தின் புத்திரர், பெருதாவின் புத்திரர்,
2: 56 யாலாகின் புத்திரர், தர்கோனின் புத்திரர், கித்தேலின் புத்திரர்,
2: 57 செபத்தியாவின் புத்திரர், அத்தீலின் புத்திரர், செபாயீமிலுள்ள பொகெரேத்தின் புத்திரர், ஆமியின் புத்திரருமே.
2: 58 நிதனீமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் எல்லாரும் முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.
2: 59 தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலுமிருந்து வந்து, தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வோத்தரத்தையும் சொல்லமாட்டாமல் இருந்தவர்கள்:
2: 60 தெலாயாவின் புத்திரர், தொபியாவின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், ஆக அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர்.
2: 61 ஆசாரியரின் புத்திரரில் அபாயாவின் புத்திரர், கோசின் புத்திரர், கீலேயாத்தியனான பர்சிலாயின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணி, அவர்கள் வம்சநாமம் தரிக்கப்பட்ட பர்சிலாயின் புத்திரரே.
2: 62 இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு விலக்கமானவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.
2: 63 ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்புமட்டும், இவர்கள் மகா பரிசுத்தமானதிலே புசிக்கத் தகாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.
2: 64 சபையார் எல்லாரும் ஏகத்திற்கு நாற்பத்தீராயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.
2: 65 அவர்களைத்தவிர ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழுபேரான அவர்களுடைய வேலைக்காரரும் வேலைக்காரிகளும், இருநூறு பாடகரும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.
2: 66 அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, அவர்களுடைய கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து,
2: 67 அவர்களுடைய ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து, கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது.
2: 68 வம்சங்களின் தலைவரில் சிலர் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்துக்கு வந்தபோது, தேவனுடைய ஆலயத்தை அதின் ஸ்தானத்திலே எடுப்பிக்கும்படிக்கு, அதற்கான மன உற்சாகமாய்க் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்.
2: 69 அவர்கள் தங்கள் சக்திக்குத்தக்கதாக திருப்பணிப் பொக்கிஷத்திற்கு அறுபத்தோராயிரம் தங்கக்காசையும், ஐயாயிரம் இராத்தல் வெள்ளியையும், நூறு ஆசாரிய வஸ்திரங்களையும் கொடுத்தார்கள்.
2: 70 ஆசாரியரும், லேவியரும், ஜனங்களில் சிலரும், பாடகரும், வாசல்காவலாளரும், நிதனீமியரும், தங்கள்தங்கள் பட்டணங்களிலும், இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் தங்கள் பட்டணங்களிலும் குடியேறினார்கள்.



