1: 2 கேனான், மகலாலெயேல், யாரேத்,
1: 3 ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு,
1: 4 நோவா, சேம், காம், யாப்பேத்,
1: 5 யாப்பேத்தின் குமாரர், கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.
1: 6 கோமரின் குமாரர், அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.
1: 7 யாவானின் குமாரர், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள்.
1: 8 காமின் குமாரர், கூஷ், மிஸ்ராயிம், பூத், கானான் என்பவர்கள்.
1: 9 கூஷின் குமாரர், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்; ராமாவின் குமாரர், சேபா, திதான் என்பவர்கள்.
1: 10 கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.
1: 11 மிஸ்ராயிம் லூதீமியரையும், ஆனாமியரையும், லெகாபியரையும், நப்தூகியரையும்,
1: 12 பத்ரூசியரையும், பெலிஸ்தரைப் பெற்ற கஸ்லூகியரையும், கப்தோரியரையும் பெற்றான்.
1: 13 கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும்,
1: 14 எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும்,
1: 15 ஏவியரையும், அர்கீயரையும், சீனியரையும்,
1: 16 அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும் பெற்றான்.
1: 17 சேமின் குமாரர், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசக் என்பவர்கள்.
1: 18 அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான்.
1: 19 ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவன் பேர் பேலேகு, ஏனெனில் அவன் நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவன் சகோதரன் பேர் யொக்தான்.
1: 20 யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், ஆசர்மாவேத்தையும், யேராகையும்,
1: 21 அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,
1: 22 ஏபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,
1: 23 ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும், பெற்றான்; இவர்கள் எல்லாரும் யொக்தானின் குமாரர்.
1: 24 சேம், அர்பக்சாத், சாலா,
1: 25 ஏபேர், பேலேகு, ரெகூ,
1: 26 செரூகு, நாகோர், தேராகு,
1: 27 ஆபிராமாகிய ஆபிரகாம்.
1: 28 ஆபிரகாமின் குமாரர், ஈசாக்கு, இஸ்மவேல் என்பவர்கள்.
1: 29 இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மவேலின் மூத்த குமாரனாகிய நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம்,
1: 30 மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா,
1: 31 யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள்; இவர்கள் இஸ்மவேலின் குமாரர்.
1: 32 ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய கேத்தூராள் பெற்ற குமாரர், சிம்ரான், யக்க்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்பவர்கள்; யக்க்ஷானின் குமாரர், சேபா, தேதான் என்பவர்கள்.
1: 33 மீதியானின் குமாரர், ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்தூராளின் குமாரர்.
1: 34 ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கின் குமாரர், ஏசா, இஸ்ரவேல் என்பவர்கள்.
1: 35 ஏசாவின் குமாரர், எலீப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள்.
1: 36 எலீப்பாசின் குமாரர், தேமான், ஓமார், செப்பி, கத்தாம், கேனாஸ், திம்னா, அமலேக்கு என்பவர்கள்.
1: 37 ரெகுவேலின் குமாரர், நகாத், சேராகு, சம்மா, மீசா என்பவர்கள்.
1: 38 சேயீரின் குமாரர், லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, தீசோன், எத்சேர், தீசான் என்பவர்கள்.
1: 39 லோத்தானின் குமாரர், ஓரி, ஓமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள்.
1: 40 சோபாலின் குமாரர், அல்வான், மானகாத், ஏபால், செப்பி, ஓனாம் என்பவர்கள்; சிபியோனின் குமாரர், அயா, ஆனாகு என்பவர்கள்.
1: 41 ஆனாகின் குமாரரில் ஒருவன் திஷோன் என்பவன்; திஷோனின் குமாரர், அம்ராம், எஸ்பான், இத்தரான், கெரான் என்பவர்கள்.
1: 42 ஏத்சேரின் குமாரர், பில்கான், சகவான், யாக்கான் என்பவர்கள்; திஷானின் குமாரர் ஊத்ஸ், அரான் என்பவர்கள்.
1: 43 இஸ்ரவேல் புத்திரரை ஒரு இராஜா ஆளாததற்குமுன்னே, ஏதோம் தேசத்தில் அரசாண்ட இராஜாக்களானவர்கள்: பேயோரின் குமாரன் பேலா என்பவன்; இவன் பட்டணத்தின் பேர் தின்காபா.
1: 44 பேலா மரித்தபின் போஸ்ரா ஊரானாகிய சேராகின் குமாரன் யோபாப் அவன் ஸ்தானத்தில் இராஜாவானான்.
1: 45 யோபாப் மரித்தபின், தேமானியரின் தேசத்தானாகிய ஊசாம் அவன் ஸ்தானத்தில் இராஜாவானான்.
1: 46 ஊசாம் மரித்தபின், பேதாதின் குமாரன் ஆதாத் அவன் ஸ்தானத்தில் இராஜாவானான், இவன் மீதியானியரை மோவாபின் நாட்டிலே முறிய அடித்தவன்; இவன் பட்டணத்தின் பேர் ஆவீத்.
1: 47 ஆதாத் மரித்தபின், மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவன் ஸ்தானத்தில் இராஜாவானான்.
1: 48 சம்லா மரித்தபின், நதியோரமான ரேகோபோத்தானாகிய சவுல் அவன் ஸ்தானத்தில் இராஜாவானான்.
1: 49 சவுல் மரித்தபின், அக்போரின் குமாரன் பாகாலானான் அவன் ஸ்தானத்தில் இராஜாவானான்.
1: 50 பாகாலானான் மரித்தபின், ஆதாத் அவன் ஸ்தானத்தில் இராஜாவானான்; இவன் பட்டணத்தின் பேர் பாகி; மேசகாபின் குமாரத்தியாகிய மாத்திரேத்தின் மகளான அவன் மனைவியின் பேர் மெகேதபேல்.
1: 51 ஆதாத் மரித்தபின், ஏதோமில் ஏற்பட்ட பிரபுக்களானவர்கள்; திம்னா பிரபு, அல்யா பிரபு, எதேத் பிரபு,
1: 52 அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு,
1: 53 கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு,
1: 54 மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு, இவர்களே ஏதோமின் பிரபுக்கள்.



